சிறப்பாக பணியாற்றிய ஈரோடு மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கோவை டி.ஐ.ஜி நேரில் பாராட்டு
கோவை சரக காவல் துணைத்தலைவர் முத்துசாமி, இ.கா.ப ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை, காவல் அலுவலகம் மற்றும் சிறப்பு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் சசிமோகன், இ.காப , மற்றும் கூடுதல் காவல் கணிகாணிப்பாளர்கள், தலைமையிடம், CWC மற்றும் CCW ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களின் அணிவகுப்பினை ஏற்றுக்கொண்ட கோவை சரக காவல் துணை தலைவர் அங்கு பராமரிக்கப்படும் ஆயுதங்கள், கோப்புகள் மற்றும் அனைத்து காவல் வாகனங்களையும் ஆய்வு செய்து, வாகன பராமரிப்பு கைதிவழிக்காவல்கள் மற்றும் காப்பு பணிகளின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினார். அங்குள்ள மோப்பநாய் படை பிரிவினை பார்வையிட்டு நல்ல முறையில் பணியாற்றி, துப்பறியும் நாய்படையினர் அனைவருக்கும் வெகுமதி அளித்து பாராட்டினார்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் அனைத்து பிரிவுகள் மற்றும் பண்டக பிரிவினை ஆய்வு செய்து அமைச்சுப்பணியாளர்களால் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு காவல் ஆளிநர்களுக்கு பணப்பயணிகளை விரைவாக பெற்று தருமாறு அறிவுரைகள் வழங்கினார். விரல் ரேகை பதிவேடு கூடம், புகைப்படப்பிரிவு மற்றும் தடயஅறிவியல் பிரிவுகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கினார்.
மாவட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற பல்வேறு குற்றசம்பவங்களில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த 50 காயல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நேரில் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் கண்டுபிடிக்க ஊக்கமளித்து அறிவுரை வழங்கினார்.

