வேளாண் விற்பனைக்குழு தலைவராக சி.த.செல்லப்பாண்டியன் பொறுப்பேற்றார் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
முதல்வர் – துணை முதல்வருக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் குவியும் பாராட்டுக்கள்

ஒருங்கிணைந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவராக அதிமுக மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் இன்று (06.01.2021) திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள வேளாண் விற்பனைக்குழு அலுவலகத்தில் காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் சி.த.செல்லப்பாண்டியன். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பெற்று பாராட்டை பெற்றவர். இதனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு முந்தைய தினம் வரை ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவர். இவர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த சமயம் தூத்துக்குடி மாவட்ட ஒட்டுமொத்த அதிமுகவினரையும் கோஷ்டி பூசல் இல்லாமல் ஒரே அணியாக அதிமுக தலைமைக்கு விசுவாசமாக செயல்பட வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கொரானா நோய் தொற்று காரணமாக கடுமையான ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் ஏழை-எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தனது சொந்த செலவில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து மளிகை பொருட்களை வழங்கினார். இதையறிந்த தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்கள் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனை வெகுவாக பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சொந்த செலவில் வயது முதிர்ந்த ஏழை-எளிய மக்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவது, குழந்தைகள் கல்விக்கு உதவி புரிவது, மதவேறுபாடின்றி அனைத்து கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் உதவி செய்து வருவது, மேலும்; கட்சித்தொண்டர்கள், நிர்வாகிகள் பலருக்கும் உதவி செய்து வருவதில் சி.த.செல்லப்பாண்டியனுக்கு நிகர் அவரே.

இந்நிலையில் தற்போது அஇஅதிமுக மாநில அமைப்பு செயலாளராக இருந்து வரும் சி.த.செல்லப்பாண்டியனுக்கு வேளாண் விற்பனைக்குழு தலைவர் பதவியை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழங்கியுள்ள நிலையில் தென்மாவட்ட அதிமுகவினர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சி.த.செல்லப்பாண்டியனின் குடும்பம் பாரம்பரியமாகவே விவசாயத் தொழிலையே செய்து வருகிறார்கள். பெரும் விவசாயியாக விளங்கும் சி.த.செல்லப்பாண்டியன் அவர்களுக்கு வேளாண் விற்பனைக்குழு தலைவர் பதவி வழங்கியது ஒருங்கிணைந்த மாவட்டமான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள விவசாய பெருங்குடி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வேளாண் விற்பனைக்குழு தலைவராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு, அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
விரைவில் தூத்துக்குடி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக சி.த.செல்லப்பாண்டியன் அதிமுக தலைமையால் நியமிக்கப்படலாம் என அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த செய்தி தூத்துக்குடி அதிமுகவினர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேளாண் விற்பனைக்குழு தலைவராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பதவியேற்பு நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், ராஜ்யசபை எம்பி விஜிலா சத்தியானந்த், முன்னாள் எம்பி வசந்தி முருகேசன், கழக அமைப்புச்செயலாளரும் தூத்துக்குடி ஆவின் சேர்மன் என்.சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தூத்துக்குடி அதிமுக மாவட்ட பொருளாளர் அமலி டி.ராஜன், முன்னாள் மாவட்ட அதிமுக பொருளாளர் ஜெபமாலை, கிழக்குப்பகுதி செயலாளர் சேவியர், மேற்குபகுதி செயலாளர் ஏ.முருகன், தளபதி கே.பிச்சையா, தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, ஜோதிமணி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், எஸ்.கே.மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகநயினார், செல்லா என்ற செல்லத்துரை, கே.கே.அரச குரு, மாதவ சிங், ராஜா மகாதேவன், என்.எஸ்.செல்லத்துரை, ஸ்ரீவைகுண்டம் பால்துரை, காயல் அன்வர், சையத் இப்ராஹிம், ஜோசப், அவைத்தலைவர் எம்.பெருமாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அன்ட்ரூ மணி, பிள்ளை விநாயகம், ராஜாராம், மில்லை ராஜா, மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர், பாம்பு கோவில் முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் முருகேசன், பிரவின் ஜெயக்குமார், அண்ணா தொழிற்சங்க மண்டல இணைச்செயலாளர் பி.சங்கர், செல்லப்பாண்டியன் அவர்களின் உதவியாளர் பி.மூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஒன்றியக்கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேளாண் விற்பனைக்குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சி.த.செல்லப்பாண்டியன் அவர்களுக்கு தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர், பொதுமக்கள், விவசாயிகள் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

