
இன்று 30/10/2020 கே சி திருமாறன் ஜி தலைமை கொண்ட தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணன் பி வதிலை செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க தேசியத் தலைவரின் 113 வது தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவினை முன்னிட்டு பூம்பாறையில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .பின்னர் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 1000 நபர்களுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

கொடைக்கானல் நகர செயலாளர் வி .ஆனந்த் தலைமையில் நடைபெற்றது …
இந்நிகழ்ச்சியில் கட்சியின் நகர தலைவர் பெஞ்சமின், நகர பொருளாளர் பிரேம், நகர இளைஞரணி தலைவர் ரமேஷ் ,நகர துணைத் தலைவர் திருச்செல்வம், நகர இளைஞரணி செயலாளர் சிவா, நகர தொண்டரணி தலைவர் அருண், ஒன்றிய இளைஞரணி தலைவர் வேல்முருகன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சசிக்குமார், ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு செல்வம் ,மேலும் நகர ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்

