
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி நகர காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தூத்துக்குடியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுபவர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும்’ எனது வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளை மதித்தும், எனக்கோ என்னால் பிறருக்கோ, விபத்து ஏற்படுத்தாதவாறு வாகனம் ஓட்டுவேன் என்றும், இனிவரும் சந்ததிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் உறுதிமொழியேற்று வாகன ஓட்டிகள் கையெழுத்திடும் நூதன சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (22.1.2021) நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உறுதிமொழியேற்று முதல் கையொப்பமிட்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைதொடர்ந்து, விளாத்திகுளம் உட்கோட்டம் காவல்துறை சார்பாக விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று (23.1.2021) நடைபெற்றது. பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பேரணி விளாத்திகுளம் முக்கிய வீதி வழியாக சென்றது.
இப்பேரணியில் ‘சாலை விதிகளை மதிப்போம். உயிரை காப்போம். குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர். இருசக்கர வாகனம் இருவருக்கு மட்டுமே. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றாதீர். மிக வேகம் மிக நன்று. அதிவேகம் ஆபத்தானது. என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மூலம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி இன்று 23.01.2021 சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு விளாத்திகுளம் உட்கோட்ட காவல் ஆளினர்களுக்கு நடைபெற்ற வாரந்திர அணிவகுப்பில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேற்படி அணிவகுப்பில் ஆய்வாளர்கள் 4 பேர்கள், உதவி ஆய்வாளர்கள் 9 பேர்கள், காவலர்கள்131பேர்கள், மொத்தம் 144 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
விளாத்திகுளம் உட்கோட்ட பகுதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு மாத விழா நிகழ்வு மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது அப்பகுதி உள்ள பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தி தொகுப்பு:
செய்தி ஆசிரியர் எம்.ஆத்திமுத்து

