திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவின்குமார் அபிநபு இ.கா.ப வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்
மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.அதன்படி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திரு. பிரவின்குமார் அபிநபு இ.கா.ப 2021ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட ஆயுதப்படை வளாக மைதானத்தில் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி, தலைமையில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்


பின் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து (Parade), பின் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, காவலர்கள் குறைகளை கேட்டறிந்தார். மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை காவல் வாகனங்களை பார்வையிட்டு, அவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்த ஆய்வின்போது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.


