வேதாரண்யத்தை அருகே ஆறுகாட்டுத்துறையில் 17 ஆம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு .வேதாரணியம் டிசம்பர் 26 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மற்றும் கோடியக்கரையில் கடுமையான பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டது. ஆதலால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 கோடிக்கரை, ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கிராம பஞ்சாயத்தார்கள் கூடி சுனாமியால் பாதிப்படைந்தஇடத்தில் அஞ்சலி செலுத்தும் வழக்கமாகவே ஏற்படுத்தி உள்ளனர்.

இன்று டிசம்பர் 26 2021 அன்றும் 17 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு ஆறுக்காட்டுத்துறையில் கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று சுனாமியால் இறந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் .
செய்தி தொகுப்பு டாக்டர்
எல்விஸ் லாய் மச்சோடா.
நாகை மாவட்ட செய்தியாளர் .

