தமிழக காவல்துறை சார்பாக மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 18.12.2021 முதல் 20.12.2021 வரை மதுரையில் நடைபெற்றது.
இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பாக பங்கேற்ற பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா கிக்பாக்ஸிங் பிரிவில் (Pensak Silat) தனிநபர் போட்டியிலும், குழுவினர் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று 02 தங்கம், 02 வெள்ளி பதக்கங்களை வென்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினார்

