கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேதாரண்யம் டிச 23
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி உடனிருந்தார்.

கீழையூர் ஊராட்சி ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கருங்கண்ணி ஊராட்சி, மீனம்பநல்லூர் ஊராட்சி காலணிதெரு, பாலக்குறிச்சி ஊராட்சி, தண்ணிலப்பாடி, மேலப்பிடாகை ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகள், பாலக்குறிச்சி ஊராட்சியில் ஜோதிகண்ணன் என்ற பயனாளிக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கினார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்; செந்தில் (கிராமஊராட்சி), ராஜ்குமார் (வட்டாரவளர்ச்சி) உதவிப்பொறியாளர்கள்; வெற்றிவேல், சுகுமார், ரமேஷ், பணி மேற்பார்வையாளர் செல்வம், கலைக்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டா் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தி சேகரிப்பாளா்,
வேதாரண்யம்.

