நெல்லை மாநகர நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஓட்டலில் அதிரடி சோதனை
முதல் நாள் விற்பனையாகாத அதை சூடு படுத்தி விற்றது அம்பலம்
தரமற்ற பரோட்டா – நூடுல்ஸ் பறிமுதல்
நெல்லை மாநகர மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 கிலோ சிக்கன் 5கிலோ புரோட்டா மற்றும் தரமற்ற நூடுல்ஸ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
முந்தைய நாள் தயாரித்த புரோட்டான்கள் மற்றும் நூடுல்ஸ்களை வேகவைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது
தமிழகத்திலேயே பல்வேறு இடங்களில் தரமற்ற பரோட்டாக்கள் மற்றும் நூடுல்ஸ்கள் உள்ளிட்ட துரித உணவகங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் சென்றன பழைய புரோட்டா கடை அப்படியே தண்ணீரில் நனைத்து வேகவைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன இதை அடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் ஹோட்டல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் காணப்படும் உணவகங்களில் புரோட்டா உள்ளிட்ட உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா ஆலோசனையின்பேரில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கரலிங்கம் ராமசுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் தேசிய நெடுஞ்சாலை நாகர்கோயில் ரோட்டில் அமைந்துள்ள டக்கம்மாள்புரம் ஆயன்குளம் பொன்னாக்குடி ஆகிய பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சைவம் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்தபோது முந்தையநாள் தயார் செய்யப்பட்ட கிரில் சிக்கன்,சிக்கன், புரோட்டா, குளிர்பானம் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது பார்த்து பறிமுதல் செய்து அதை எடுத்து கிருமி நாசினி தெளித்து அளிக்கப்பட்டது தொடர்ந்து இதேபோல் முந்தைய நாள் உணவுகளை கோழி இறைச்சியை வைத்திருந்தால் உணவுகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் சதீஷ் சசி தீபா எச்சரித்துள்ளார்.
செய்தியாளர் நெல்லை எம் கொம்பன் ராஜ்

