நாகப்பட்டினம் மாவட்டத்தில் காணாமல் போன 75 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைப்பு
வேதாரண்யம் டிச 22
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று அதன் விபரங்களை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.
அதனடிப்படையில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன், தலைமை காவலர் முருகதாஸ், மற்றும் காவலர்கள் எண்ணரசன், வினோத்குமார், முத்துக்குமார் அடங்கிய குழு அந்த மனுக்கள் சம்பந்தமாக துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் 75 செல்போன்களை கண்டுபிடித்தனர். மேலும் இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாயாகும்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்ட 75 செல்போன்களை உரியவர்களிடம் இன்று 22.12.2021 வழங்கி செல்போன்களை கண்டுபிடித்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்
வேதாரண்யம்

