தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கை: அதிமுக அமைப்பு தேர்தலில் முதல் கட்டமாக ஒருங்கிணைப்பாளர்களுக்கு நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது ஆணைக்கிணங்க இரண்டாம் கட்ட அமைப்புத் தேர்தல் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் கிளை கழக, பேரூராட்சி வார்டு, நகர வார்டு மற்றம் மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை 10.00 முதல் மாலை 05.00 மணி வரை கீழ்காணும் இடங்களில் நடைபெறுகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான கே.டி.பச்சைமால் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுளனர்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 6 பகுதிகளுக்கு தூத்துக்குடி, பாளை ரோடு பாணு பிருந்தாவன் ஹோட்டல் திருமண மண்டபத்திலும், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியம், ஏரல், சாயர்புரம் பேரூராட்சிகளுக்கு ஏரல் பஸ் ஸ்டான்டு உட்புறமுள்ள ராசி திருமண மண்டத்திலும், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு பேட்மாநகரம் எம்.ஆர்.ஜி திருமண மண்டபத்திலும், ஆழ்வார்திருநகரி கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் தென்திருபேரை பேரூராட்சிக்கு குரும்பூர் மெயின் ரோடு ஞானம் திருமண மஹாலிலும், உடன்குடி ஒன்றியம், பேரூராட்சிக்கு உடன்குடி வடக்கு பஜார் உத்திர பாண்டி நாடார் திருமண மண்டபத்திலும்,
சாத்தான்குளம் ஒன்றியம், பேரூராட்சிக்கு சாத்தான்குளம் இட்டமொழி ரோடு வி.ஜி.வி.சரஸ்வதி மஹாலிலும், திருச்செந்தூர் ஒன்றியம், பேரூராட்சிக்கு திருச்செந்தூர் கீழ ரத வீதி பண்ணயார் சமூதாய மண்டபத்திலும், காயல்பட்டினம் நகர வார்டுகளுக்கு காயல்பட்டினம் மீரான் லாட்ஜ் ஹாலிலும், ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு ஐக்கிய வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்திலும், ஆத்தூர் பேரூராட்சிக்கு முக்கானி ரவுன்டானா உமரி தங்கம் லாட்ஜ் வளாகத்திலும், கானம் பேரூராட்சிக்கு சோனக்கண் விளை அதிமுக அலுவலகத்திலும், நாசரேத் பேரூராட்சிக்கு திருமறையூர் பஸ் ஸ்டாப் ரெஹாபாத் ரெசிடென்சி வளாகத்திலும், ஆழ்வார்திருநகரி பேரூராட்சிக்கு ஐஸ்வர்யா திருமண மஹாலிலும், பெருங்குளம் பேரூராட்சிகுட்பட்ட வார்டுகளுக்கு பண்டாரவிளையிலுள்ள அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் அலுவலகத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த வாய்ப்பினை அமைப்புத் தேர்தலில் போட்டியிடும் தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மாநகர வட்ட கழக, நகராட்சி வார்டு, பேரூராட்சி வார்டு, மற்றும் கிளை கழக நிர்வாகிகள், கழகத்தினர் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதற்கான கட்டண தொகையாக மாநகர வட்ட கழக செயலாளருக்கு ரூ.2ஆயிரமும் மற்ற பதவிகளுக்கு தலா ரூ.700ம், நகராட்சி வார்டு கழக செயலாளருக்கு ரூ.500ம் மற்ற பதவிகளுக்கு ரூ.300ம், பேரூராட்சி வார்டு கழக செயலாளருக்கு ரூ.300ம் மற்ற பதவிகளுக்கு ரூ.200ம், ஒன்றியங்களுக்குட்பட்ட கிளை கழக செயலாளருக்கு ரூ.250ம் கட்டணத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளை கழகத்தில் ஏனைய பதவிகளுக்கு கட்டண தொகை செலுத்த தேவையில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.

