15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நெல்லை தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் விவசாய கடன் வழங்க குறியீடு நிர்ணயித்து பணியாளர்களை கண்ணியக் குறைவாக நடத்துவதை தவிர்க்க வேண்டும் வாய்மொழி உத்தரவு கைவிடவேண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பேக்கிங் செய்து வழங்க வேண்டும் சங்கங்களில் உள்ள அனைத்து காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் தங்க நகை ஏலத்தில் வித்தியாச தொகை நஷ்டஈடு கணக்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் தொடக்க வேளாண்மை சங்கம் மாவட்ட தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார் கௌரவ செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார் மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார் துணைத்தலைவர்கள் ஆறுமுகம் மாரியப்பன் இணைச்செயலாளர் பூசை துரைச்சி முத்தையா போராட்டக்குழு தலைவர் சுந்தரேசன் உள்ளிட்ட பலர் பேசினர் பொருளாளர் சண்முக சாமி நன்றி கூறினார் நெல்லை தென்காசி மாவட்டங்களில் கூட்டுறவு ஊழியர்கள் 477 மற்றும் வங்கி ஊழியர்கள் 450 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர் மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

