மானூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு நடத்தினார்
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நடத்தப்படும் அரசு மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை பதிவேடுகளையும் பார்த்து ஆய்வு மேற்கொண்டார் மாணவர்கள் விடுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் உணவு சமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார் அப்போது மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைத்திருந்த உணவை சாப்பிட்டு பரிசோதித்தார்.
மாணவர்களுக்கு நல்ல முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும் என்று ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தியாகராஜன் முன்னாள் எம்எல்ஏ பேலஸ் லட்சுமணன் மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, அன்பழகன், வாசுகி செல்லத்துரை, வட்டச் செயலாளர் மாரிமுத்து, டவுன் அஜய், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

