தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆயிரத்து 214 நபர் பணிக்கு தேரவு
வேதாரண்யம்
நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் கல்லூரியில் மாவட்டநிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் முன்னணி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இம்முகாமில் 50 முன்னனி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் 15 பயிற்சி துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1750நபர்கள், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இதர மாவட்டங்களிலிருந்து சுமார் 500 நபர்கள் என மொத்தம் 2250 வேலைதேடும்; நபர்கள் கலந்துகொண்டனர். நம் மாவட்டத்தில் 1014நபர்களும், இதர மாவட்டங்களில் 200 நபர்கள் என மொத்தம் 1214 நபர்கள் பணிக்காக தேர்வுசெய்யப்பட்டனர்.

அவ்வாறு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையினையும், மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற திறன் வளர்ச்சியில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ;வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலமுருகன், உதவி திட்ட அலுவலர்கள் பாலன், சௌந்தரராஜன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

