நெல்லை டவுன் சாப்ட்ர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார் மேலும் 4 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர் பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் எதிரே சாப்டர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது இந்தப் பள்ளி ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை வகுப்புகள் சுமார் 2500 மாணவர்கள் படித்து வருகின்றனர் பகல் 11 மணி அளவில் மாணவர்களுக்கு 10 நிமிடம் இடைவெளி விடப்பட்டது அந்த இடைவெளியில் சில மாணவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்று உள்ளனர் மற்றொரு கழிவறை கட்டிடமும் முன்பு சில மாணவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்
அப்போது திடீரென அந்த கழிவறை சுவர் இடிந்து விழுந்தது இதில் அங்கு நின்ற அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த தச்சநல்லூர் இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தினகரன் மகன் விஸ்வ ரஞ்சன் என்ற மாணவரும் 9ம் வகுப்பு படிக்கும் படித்துவந்த நரசிங்கநல்லூர் சத்யா நகர் கார்த்திக் மகன் அன்பழகன் என்ற மாணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் விபத்தில் காயமடைந்த மாணவர்கள் சஞ்சய் மற்றும் டவுன் பாட்டை 10 வீரபாண்டி நகரை சேர்ந்த முத்து மாலை என்பவர் மகன் இசக்கிபிரகாஷ் வாகைகுளம் செந்தமிழ் நகர் பீர் முகைதீன் மகன் சேக் அபுபக்கர்
கித்தாணி கொண்டா நகரம் சம்ஸ் நகர் பாபு மகன் அப்துல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் சஞ்சய் இசக்கிபிரகாஷ் சேகர் கித்தாணி அப்துல்லா ஆகிய மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சம்பவ இடத்தில் ஈஸ்வரன் அன்பழகன் ஆகியோர் உயிரிழந்தது தகவல் மாணவர்கள் மத்தியில் பரவியது அவர்கள் இடிந்து கழிவறை கட்டிடம் அருகே மாணவர்கள் திரண்டனர் இதற்கிடையே படுகாயம் அடைந்த மாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு அரை மணி நேரம் தாமதமாகவே புறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்பறையில் உள்ள பெஞ்சு நாற்காலி பள்ளியில் இருந்த மின்விளக்கு பூந்தொட்டிகளை அடித்து நொறுக்கினர் அதன் பின்னர் மாணவர்கள் நெல்லை டவுன் ரோட்டில் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் மேம்பாலத்தில் இருந்து பள்ளி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது
இதையடுத்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கிழக்குப் பகுதி துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்கு பகுதி துணை கமிஷனர் சுரேஷ்குமார் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் சந்திப்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார் வன சுந்தர் அன்னலட்சுமி சுப்புலட்சுமி ஜெகதா இளவரசன் போக்குவரத்து ஆய்வாளர் செல்லத்துரை மற்றும் காவலரும் போக்குவரத்து காவலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒரு புறம் மட்டும் செல்ல வகையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்

பள்ளியில் கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான நெஞ்சை பிளக்கும் இந்த சம்பவம் நெல்லை மாநகர் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி மாணவர்களின் பெற்றோர் பதை பதைப்போடு பள்ளிக்கு திரண்டு வந்தனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 2 மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுது அங்கிருந்து அனைவரும் நெஞ்சை உலுக்கிய இந்த சம்பவம் நெல்லை மாநகரில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

