நாகப்பட்டினத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
வேதாரண்யம் டிச 18
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கிரசண்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில்; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
உலமாக்கள் நலவாரியம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள், கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம், கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்க நிதியுதவி வழங்கும் திட்டம், முஸ்லீம், கிறிஸ்தவ மகளிர்கள் பயன்பெற தொடங்கப்பட்ட சங்கங்கள், டான்கோ மூலமாக குறைந்த வட்டியில் பல்வேறு கையான கடன் உதவி திட்டம், மகிளா சம்ருதி யோஜனா திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கு அளிக்கப்படும் தையல் தொழிற்பயிற்சி திட்டம், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள உதவி செய்யும் திட்டம், உலமாக்கள் பயன்பெற இருசக்கர வாகனங்களுக்கான நிதியுதவி திட்டம், கல்லறை மற்றும் கபஸ்தான் வைக்க நிலம் கையகபடுத்தும் திட்டம் போன்ற பல்வேறு திட்;டங்கள் செயல்பட்டு வருவதை சிறுபான்மையினர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும், நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பித்த 21 உலமாக்கள் மற்றும் இதரபணியாளர்கள்; பயனாளிகளுக்குபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நலவாரிய அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர், அலுவலக கண்காணிப்பாளர் புஷ்பலதா, கருங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி திருத்தல பேராயர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் ராபியத்துல் பசிரியா, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக உறுப்பினர் முகமது ஆரிப் சாகிப், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

