வறுமை ஒழிப்பு சட்ட பற்றிய விழிப்புணர்வு முகாம்; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 16.12.2021 தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் வறுமை ஒழிப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாமானது தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள மரியா மஹாலில் வைத்து நடைபெற்றது. அதில் மாண்புமிகு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி திருமதி.M.பீரித்தா, M.L., அவர்கள் தலைமை தாங்கினார்.
மேற்படி விழிப்புணர்வு முகாமில் கிராம உதய தொண்டு நிறுவன இயக்குனர் /நிறுவனர் டாக்டர். திரு.V.சுந்தரேசன், தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் திரு.திருவள்ளுவன், தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் திரு.சூரியன், தூத்துக்குடி மாவட்ட கிராம உதய தொண்டு நிறுவன பணியாளர்கள், 500 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். மேற்படி முகாமில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நலவாரியம் மூலம் 400 மக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டைகள் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் தலைமையில் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 400 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த சட்ட விழிப்புணர்வு முகாம் மூலம் பயனடைந்துள்ளனர்கள்.

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழவின் செயலாளர் தனது தலைமையுரையில இலவச சட்டத்திட்டத்தை பற்றியும், அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்றும், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கூறினார். மேற்படி சட்ட விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணியாளர்கள் திரு.A.நம்பிராஜன், திரு.T.பால் செல்வம் மற்றும் கிராம உதய தொண்டு நிறுவன ஊழியர் திரு.செல்வம், திரு.ராமச்சந்திரன் ஆகியோர்கள் செய்திருந்தார்கள்.

