ரோட்டரி கிளப் சார்பில் வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ. 1லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான படுக்கைகள் வழங்கல்
வேதாரண்யம் டிச 17
வேதாரண்யம் அரசு மாவட்ட தலைம மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் நோயாளிகளுக்கான 20 படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி கிளப் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றது.

ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான 20 படுக்கைகளை மருத்துவமனை தலைமை மருத்துவர் முருகப்பன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் சிவகுமார், உமாமகேஸ்வரன், சங்க செயலாளர் கார்த்திகேயன், உறுப்பினர்கள் அம்பாள் ஜெயச்சந்திரன் உட்பட சங்கத்தினரும், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

