வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்;-2022 குறித்து இரண்டாவது முறை ஆய்வு கூட்டம்
வேதாரண்யம் டிச 16
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் முனைவர் பாஸ்கரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்;-2022 குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்;-2022-ல் பெறப்பட்ட படிவங்களை நாகப்பட்டினம் தொகுதி (சிக்கல்) மற்றும் கீழ்வேளுர் தொகுதி (அத்திபுலியூர்) ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சௌமியா, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், தேர்தல் வட்டாட்சியர் பிரான்சிஸ் உட்பட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

