வேதாரண்யத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மறியல் போராட்டம்
வேதாரண்யம் டிச 14
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் மற்றும் கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க கோரி மறியல் போராட்டம் அமைப்பின் நாகை மாவட்ட துணைத் தலைவா் சிக்கந்தர் தலைமையில் நடந்தது.
போராட்டத்திற்கு வேதாரண்யம் ஒன்றிய தலைவர் சண்முகம், இணைச் செயலாளர் பாலமுருகன், மாவட்டக்குழு ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றிய கிளைச் செயலாளர்கள் முருகையன், நாகேந்திரன், ஒன்றியத் தலைவர் குப்புசாமி, மாராச்சேரி கிளைச் செயலாளா் வெள்ளிநாதன், நாகக்குடையான் கிளைத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்புத் தொகை அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரூ. 3800மும், தெலுங்கானாவில் ரூ.3016மும் வழங்கப்படுவதாக தெரிவித்து அது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

