வேதாரண்ம் டிச 13
வேதாரண்யத்தில் காவல்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தியில் கடந்த டிசம்பர் 6-ம்தேதி அம்பேத்கர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற போது தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

