நாகப்பட்டினம் டிச 13
ஹரிசுஜித்,விஜயபிரபாகரன் ஶ்ரீநாத் ஆகியோர் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் இம்மாணவர்கள் பள்ளியின் எதிரே உள்ள கடையில் நோட்டு வாங்கி வந்துள்ளனர். அதைபிரித்த போது அந்த நோட்டின் உள்ளே 100 ரூபாய் நோட்டு ஒன்றும். 500 ரூபாய் நோட்டு ஒன்றும் இருந்துள்ளது.
முதலில் விளையாட்டு நோட்டாக இருக்கும் என நினைத்த மாணவர்கள் இல்லை இது ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள்தான் என்பதை அறிந்தவுடன் கடைக்குச் சென்று திருப்பி கொடுத்துள்ளனர். கடைக்காரர் இவர்களுடைய நேர்மையை பாராட்டியுள்ளார். ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் இவர்களது நேர்மைக்குணத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

