*தலைஞாயிறு பேரூராட்சியில் பல்நோக்கு உழவர் கலந்தாய்வு கூடம் திறப்பு விழா*
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் பல்நோக்கு உழவர் கலந்தாய்வு கூடத்தை பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் ரூபாய் முப்பத்தி ஐந்து லட்சமும் ,தலைஞாயிறு பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சமும் ,மொத்தம் 50 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு உழவர் கலந்தாய்வுக் கூடம் கட்டப்பட்டது . நாகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்தாய்வு கூடத்தை திறந்து வைத்தார். உடன் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என் கவுதமன் , செயல் அலுவலர் தலைஞாயிறு பேரூராட்சி, தலைஞாயிறு வட்டார ஆத்மா தலைவர் மகா குமார், தலைஞாயிறு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய சங்க செயலாளர் சம்பந்தம் ,தலைஞாயிறு ஒன்றிய குழுத்தலைவர் தமிழரசி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளார்.

