நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வேதாரண்யம் டிச 10
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தொடர்பான அனைத்து திட்டங்கள் பற்றிய விரிவான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம், அட்மா திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் மற்றும் கூட்டுப்பண்ணைய திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களில் 2021-2022 ஆம் ஆண்டில் பெறப்பட்டுள்ள இலக்கு மற்றும் சாதனை விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் பசுமை காடுகள் திட்டத்தை துரிதமாகவும் செயல்படுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மதியரசன், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
வேதாரண்யம்

