தன் உயிர் பிரியும் தருணத்தில் முப்பது உயிர்களை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனர்
—–
மதுரையில் பேருந்து பயணத்தின்போது அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பால் மரணம் ஏற்பட்டது அந்த சமயம் சாமர்த்தியமாக செயல்பட்டு 30 பயணிகளை காப்பாற்றிய சம்பவம் பொதுமக்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு கொடைக்கானல் வரை செல்லும் அரசு பேருந்தில் இன்று வழக்கம் போல ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
அதனை தொடர்ந்து பேருந்து குரு தியேட்டர் சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு வலி காரணமாக சற்று நிலை தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் ஓட்டுனர் அனைத்து பயணிகளையும் காப்பாற்றும் நோக்கில் தனது வலியையும் தாங்கிக் கொண்டு பேருந்தை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார். இதனால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர இதுபற்றி நடத்துனர் ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஓட்டுனர் பயணிகள் உயிரை காப்பாற்றும் நோக்கில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சாலையில் ஓரத்தில் நிறுத்தி ஸ்டெரிங்கின் மீது விழுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வந்தவர்கள் ஆறுமுகத்தை பரிசோதித்போது மாரடைப்பால் உயிரிந்துள்ளார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அதிகாலையில் 30 பயணிகளுடன் பயணித்த பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதும் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய சம்பவம் கண்டு அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் வேதனையில் கண்ணீர் விட்டு கதறினர். தன் உயிர் பிரியும் நேரத்திலும் கூட சாமர்த்தியமாக செயல்பட்டு மாரடைப்பு வலியையும் தாங்கிக் கொண்டு 30 பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனரின் இறப்பு அனைவரையும் வேதனைப்படுத்தும் நிகழ்வாக மாறிவிட்டது இந்த ஓட்டுனர் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது
செய்தி தொகுப்பு கொடைக்கானல் வி ஆனந்த்

