ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர், வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் நாட்டையே உலுக்கியது அனைத்து தரப்பு மக்களும் மறைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் சமூக ஆர்வலர் பேத்துப்பாறை மகேந்திரன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழியும் முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதி மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு
மறைந்த முப்படைத் தளபதி அஞ்சலி செலுத்தினார் அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். முப்படைத் தளபதி மறைந்த இந்த சம்பவம் கொடைக்கானல் மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
செய்தி தொகுப்பு கொடைக்கானல் வி ஆனந்த்.

