காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தவும், பொதுமக்களுடன் எளிதாக அணுகவும், குற்றங்களை தடுக்கவும், அனைத்து இடங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தினசரி மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை, தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சைக்கிள் ரோந்து மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், 08.12.2021 அன்று சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில், அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களும் சைக்கிள் ரோந்து பணிகள் மேற்கொண்டனர்.
இன்று காலை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையாளர் தலைமையில், உதவி ஆணையர் மற்றும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களும் சைக்கிள் ரோந்து பணிகள் மேற்கொண்டனர். T16 நசரத்பேட்டை காவல் நிலையம் முன்பு இருந்து ரோந்து பணிகள் துவங்கப்பட்டது. இந்த சைக்கிள் ரோந்து பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கள் கல்லூரி மாணவிகள் உட்பட அனைத்து தரப்பினரும் இனி அச்சம் இல்லாமல் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள் சென்னை பெருநகர ஆணையர் அவர்களின் இந்த அதிரடி நடவடிக்கை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது
செய்தி தொகுப்பு
தலைமைச்செயலக தலைமை நிருபர்.
R. ஆனந்த்பாபு




