• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

டிஜிபி உத்தரவை ஏற்று தூத்துக்குடியில் கஞ்சா, குட்கா, லாட்டரி ஒழிக்க எஸ்பி ஜெயக்குமார் தீவிரம்!

policeseithitv by policeseithitv
December 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
டிஜிபி உத்தரவை ஏற்று தூத்துக்குடியில் கஞ்சா, குட்கா, லாட்டரி ஒழிக்க எஸ்பி ஜெயக்குமார் தீவிரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

டிஜிபி உத்தரவை ஏற்று தூத்துக்குடியில் கஞ்சா, குட்கா, லாட்டரி ஒழிக்க எஸ்பி ஜெயக்குமார் தீவிரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டதில் 08.12.2021 ஒரே சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலைப்பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் 43 பேர் கைது – 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 1800 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 75 மதுபாட்டில்கள் பறிமுதல் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை.

♻️ தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப்பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள்; உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தினமும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்துறை உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

♻️ அவரது உத்தரவின்பேரில் நேற்று (08.12.2021) ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப்பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மற்றும் சூதாட்டம் ஆடியவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 7 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில 2 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 11 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 43 வழக்குகள் பதிவு செய்து 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

♻️ இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 9 பேரும், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 31 பேரும், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 1800 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

♻️ தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முத்தையாபுரம் பகுதியில் 1கிலோ கஞ்சா பறிமுதல்:

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, 1100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டவுண் டிஎஸ்பி (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முள்ளக்காடு நேருஜி நகர் அருகே சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்வேல் மகன் மாரிமுத்து (37), என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை மூலம் 453 செல்போன்கள் மீட்பு – மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் துரித நடவடிக்கை

Next Post

காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்த சைக்கிள் ரோந்து

Next Post
காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்த சைக்கிள் ரோந்து

காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்த சைக்கிள் ரோந்து

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In