ஈரோடு, டிச. 6-
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அ.தி.மு.க.,வினரால் அனுசரிக்கப்பட்டது. இதில், ஈரோட்டில் உள்ள மாவட்ட அ.தி.மு.க., அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு, எம்.ஜி.ஆர்., உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். இதேபோல், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன், மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்திவ், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால், ஆவின் துணை தலைவர் குணசேகரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் பழனிசாமி, பகுதி செயலாளர் மனோகரன், ஜெகதீஸ், கேசவமூர்த்தி, பகுதி அவை தலைவர் மீன் ராஜா, மொடக்குறிச்சி யூனியன் சேர்மேன் கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதே போல் பெரியசேமூர் பகுதியில் ஜெ பேரவை சார்பில் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஜெ பேரவை இணைச் செயலாளர் எஸ் வீரக்குமார் தலைமையில் மாநகர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் யுனிவர்சல் கே.என் நந்தகோபால் முன்னிலையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர். ஜி .மூர்த்தி ,அரிசி செந்தில், மாரிமுத்து, ஹரிகுமார், சிவகுமார், ஜெயப்பிரகாஷ், ரவி, மணி, நாகராஜ், குமார், முருகன், லோகு, ராஜசேகர், குப்புசாமி ,மற்றும் பலர் கந்துகொண்டனர். ராமலிங்கம் கலந்து கொண்டு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். இதேபோல், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன், மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்திவ், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால், ஆவின் துணை தலைவர் குணசேகரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் பழனிசாமி, பகுதி செயலாளர் மனோகரன், ஜெகதீஸ், கேசவமூர்த்தி, பகுதி அவை தலைவர் மீன் ராஜா, மொடக்குறிச்சி யூனியன் சேர்மேன் கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதே போல் பெரியசேமூர் பகுதியில் ஜெ பேரவை சார்பில் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஜெ பேரவை இணைச் செயலாளர் எஸ் வீரக்குமார் தலைமையில் மாநகர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் யுனிவர்சல் கே.என் நந்தகோபால் முன்னிலையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர். ஜி .மூர்த்தி ,அரிசி செந்தில், மாரிமுத்து, ஹரிகுமார், சிவகுமார், ஜெயப்பிரகாஷ், ரவி, மணி, நாகராஜ், குமார், முருகன், லோகு, ராஜசேகர், குப்புசாமி ,மற்றும் பலர் கந்துகொண்டனர்.

