தேனி : டிசம்பர்:06
தேனி மாவட்டம் முல்லைப்பெரியார் அணைக்கு எதிராக கேரளாவில் டிசம்பர் 5ம் தேதி முல்லை பெரியார் அணையால் கேரளாவிற்கு ஆபத்து என்று சொல்லி இரு சக்கர வாகனப் பேரணிகள் மற்றும் உண்ணாவிரத போராட்டம், ஆர்ப்பாட்டம், என நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் முல்லைப்பெரியார் அணையை பாதுகாக்க தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகெங்கை என ஐந்து மாவட்ட விவசாயிகள் மற்றும் ஐந்து மாவட்ட விவசாய சங்கங்கள் தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்க்கேம்பில் ஐந்து மாவட்ட விசாயிகள் சங்க தலைவர் எஸ் ஆர் தேவர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இப்போராட்டத்தின் மூலம் முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பாக உள்ளன நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடி உயர்த்துவது வே ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் நோக்கம் மேலும் கேரளாவில் அணை குறித்து தவறான பொய் பிரச்சாரம் செய்து வருபவர்கள் மீது ஆளும் கேராளா அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் கடந்த 2011 ஆண்டு பல லட்சம் பேர் போராட்டத்தில் களம் இரங்கியது போல் மீண்டும் முல்லை பெரியார் அணையை பாதுகாக்க ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெறும் போராட்டத்தை நடத்துவோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்
மேலும் இந்த போராட்டத்தின் மூலம் லோயர்கேம் – குமுளி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டன இந்த போராட்டத்தில் தமிழ் நாடுகள் இரக் கும் சங்க மாநில நிர்வாகி நல்லசாமி மற்றும் ஐந்து மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் சலேத்து, அன்வர் பாலசங்கம், பொன் காட்சிகண்ணன், ரஞ்சித் குமார், ராஜிவ், மகேஷ்வரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர்
S விஜய லிங்கராஜா

