பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள், ஆசிரியை
பலியான 12-ம் ஆண்டு நினைவு தினம் .
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும்போது சாலையோரத்தில் இருந்த குளத்திற்குள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பள்ளிக் குழந்தைகள் மற்றும் சுகந்தி என்ற ஆசிரியை இறந்து போயினர்.
அதன் 12-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாகக்குடையான் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள நினைவு ஸ்தூபியில் விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
வேதாரண்யம்

