தமிழக காவல்துறை புலனாய்வில் சிறந்த விளங்குவது போல் விளையாட்டு போட்டிகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக காவலர்களுக்கு இடையான தமிழக அளவில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தமிழக காவல் துறையை சேர்ந்த நான்கு மண்டலங்களில் இருந்தும் 60 பேர் இந்தப்போட்டியில் கலந்து கொண்டனர்.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி சென்னை 3வது பட்டாலியன் வீராபுரத்தில் நடைபெற்ற இந்த மல்யுத்தப் போட்டியில் சென்னையிலிருந்து குறிப்பாக இரண்டு காவலர்கள் மட்டுமே இந்த மல்யுத்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஆயுதப்படை, பட்டாலியன், போன்றவற்றில் பணியாற்ற கூடிய காவலர்கள் மேற்கண்ட விளையாட்டு போட்டிகளில் அதிகமானோர் பங்கேற்கும் நிலையில் சென்னை சட்ட ஒழுங்கு பிரிவில் பணியாற்றி கொண்டு விளையாட்டு போட்டிகளிலும் தங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு வரும் இரண்டு காவலர்கள் சென்னை சிட்டி போலீசில் பணியாற்றக்கூடிய காவலர்கள் இந்த மல்யுத்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் பற்றி விபரம், குரோம்பேட்டை S13 காவல் நிலையத்தை சேர்ந்த முதல் நிலை காவலர் பர்வின் தினகரன் தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞான புரத்தைச் சார்ந்த இவர் சிறந்த விளையாட்டு வீரர் நடந்து முடிந்த மல்யுத்த போட்டியில் முதல் பரிசை பெற்றவர். இவர் கபடி போட்டி வீரரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல் நிலை காவலர் திருவெற்றியூர் H8 குற்றப்பிரிவு உதவி ஆணையர் தனிப்படை பிரிவில் உள்ள . தினேஷ்யும் மாநில அளவில் நடைபெற்ற இந்த மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
130 kg எடைப்பிரிவில் முதல் நிலை காவலர் பர்வின் தினகரன் முதலிடம் பிடித்துள்ளார்,
97 kg எடைப் பிரிவில் குற்றப்பிரிவு உதவி ஆணையர் தனிப்படை பிரிவில் பணியாற்றி வரும் தினேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை சிட்டி போலீசாக பணியாற்றி வரும் அவர்கள் இருவரும் அகில இந்திய காவலர்களுக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் பயிற்சியாளர் எஸ். சுரேஷ் குமார் பள்ளிக்கரணை S10 தலைமை காவலர் ஆவார் என்பது குறிபிடதக்கது…
சுமார் 10 ஆண்டுகளாக மல்யுத்த போட்டி பயிற்சியாளர் ஆக செயல்பட்டு வருகிறார்.
கை மல்யுத்த வீரராக சுரேஷ்குமார் தமிழக காவல் துறையில் அங்கம் வகித்து வருகிறார். என்பது கூடுதல் சிறப்பு. இவர் பல்வேறு காவலர்களுக்கு சிறந்த பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.

வருகிற டிசம்பர் 26 முதல் 30 தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள அகில இந்திய மல்யுத்த போட்டிக்கு சென்னை மாநகர் சட்ட ஒழுங்கு போலீசாக பணியாற்றிவரும் இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய அளவில் காவலர்களுக்கான மல்யுத்த போட்டியில் வெற்றி கோப்பையை பெறுவதற்காக தங்களை தயார் படுத்தி வரும் சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு போலீசார் இருவருக்கும் சென்னை போலீசார்கள் உட்பட பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தங்களுக்கு காவல் துறையில் வேலை கிடைத்து விட்டது. இனிமேல் விளையாடத் தேவையில்லை என திறமையுள்ள காவலர்கள் ஒதுங்கி செல்லாமல் தொடர்ந்து விளையாடி தமிழக காவல் துறைக்கு பெருமை சேருங்கள் என பதக்கம் வென்ற காவலர்களுக்கு
விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும்
காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து காவலர்கள் பலரும்
ஊக்கமளித்து வருகின்றனர்.
அதுபோல்
தமிழக காவல்துறையினர் பலருக்கும் ரோல் மாடலாக விளங்கும்
அதிரடி ஐபிஎஸ் என பெயர் பெற்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஆகியோர் எப்போதுமே காவலர்களின் நலன் மற்றும் அவர்களது சீர்மிகு செயல்பாடுகளை ஊக்குவித்து வருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே ஆகையால் அகில இந்திய அளவில் காவலர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சென்னை சிட்டி போலீஸ் 2 பேர் உட்பட நான்கு மண்டலங்களில் இருந்து இந்தப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள காவலர்கள் அனைவருக்கும் ஊக்கமளித்து தமிழக காவல்துறை இந்திய அளவில் முதன்மை இடத்தை பிடிக்க ஆசி வழங்கி டெல்லியில் நடைபெற உள்ள மல்யுத்தப் போட்டியில் வெற்றி பெற அறிவுரை வழங்குவார்கள் என தமிழக காவல்துறை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் நடைபெறும் காவலர்களுக்கான மல்யுத்த போட்டியில் தமிழக காவல்துறை வெற்றிக் கோப்பையை பெற
போலீஸ் செய்தி நியூஸ் சேனல் குழுமம் சார்பில் வாழ்த்துகிறோம்.
செய்தித் தொகுப்பு செய்தியாசிரியர் எம் . ஆத்திமுத்து.

