தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை தட்டிப்பறிக்கும் மத்திய பாஜக
அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆரம்பப்பள்ளி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
——————
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த மாமல்லபுரத்தில் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் ஆதிதிராவிட நல ஆரம்பப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு பணிகளில் 100 சதவீதமும், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுப் பணிகள் மற்றும் தனியார் நிறுவனத்தில் 90 சதவீதமும் தமிழர்களுக்கே வேலை என்பதை உறுதி செய்ய தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
மத்திய பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்வு என்ற திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு கிடைக்க இருக்கும் வேலைவாய்ப்புகளை பறிக்கும் மத்திய பாஜக அரசின் திட்டத்தை கண்டித்தும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவீதத்தை தமிழர்களுக்கே வழங்க கோரியும், தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த கோரியும், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழர்களே பணியமர்த்தபட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மாமல்லபுரம் நகர விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி முன்பு கண்டன ஆர்பாட்டம் நடந்தது. மாநில தொண்டரணி செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் இசிஆர் த.அன்பு செங்கை இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் மல்லை சாலமன், மல்லை நகர செயலாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மல்லை நகர துணை செயலாளர் பிரகாஷ், நகரதுணை செயலாளர் சிந்தனை சிவா ஆகியோர் வரவேற்றனர். இதில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை தட்டிப்பறிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். இதில் விசிக நிர்வாகிகள் கவாஸ்கர், ராவணன் ரகு, நவிண், பிலிப், சிவராஜ், வீரவிஜி உள்ளிட்ட பலர் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

