வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் இராமகோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளியில் 80
மாணவர்களுடன் ஒரு ஆசிரியர் பணி புரியும் பள்ளிக்கு உடனடியாக மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை
வேதாரண்யம்.நவ.25
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் ராம கோவிந்தன் காட்டில் இயங்கிவந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 2013 _14 ஆண்டில் மாணவர்கள் இல்லாத சூழ்நிலையில் மூடப்படும் நிலை ஏற்பட்டது ஒன்பது தினங்கள் பள்ளிக் கூடம் மூடப்பட்டது இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆணைக்கிணங்க செட்டிபுலத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆசிரியர் சுப்பிரமணியன் பணி மாறுதல் செய்யப்பட்டு இராமகோவிந்தன் காடு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டார் இவர் பணியாற்றிய உடன் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சித்தார் இவரது அயராத உழைப்பும் முயற்சியும் வீண் போகவில்லை 2014 _15 ஆண்டில் 6 மாணவர்களை சேர்த்து பள்ளியை இயங்க செய்தார் அடுத்த கல்வி ஆண்டில் தனது சொந்த மகனையே இந்த பள்ளியில் சேர்த்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை அதிகமாக அரசு பள்ளியில் சேர்த்து மிகச்சிறப்பாக கல்விப் பணியாற்றினார் கடந்த ஆண்டில் 35 மாணவர்களும் இந்த ஆண்டில் 68 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் மேலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வயதுடைய 12 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் மேலும் இந்த பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார் எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடைவிடாத முயற்சியால் தனியார் பள்ளிக்கு இணையான ஸ்மார்ட் கிளாஸ் இணையதள கல்வி அரசுப் பள்ளிக்கு முன்மாதிரியாக இந்தப் பள்ளி இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த ஆண்டு வட்டார வள அளவில் அதிக மாணவர்களை சேர்த்து பெருமைக்காக பள்ளிக்கல்வித்துறை இந்த இந்த ஆசிரியரை பாராட்டியது ஆசிரியர் சுப்பிரமணியன் அவர்களின் அயராத உழைப்பால் பல்வேறு விருதுகளையும் சான்றுகளையும் பெற்று இவ்வளவு பெருமைக்குரிய இந்த பள்ளியில் ஒருவராக பணியாற்றி என்பது மாணவர்களுடன் வகுப்புகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே உங்க பள்ளிக்கு உடனடியாக தலைமையாசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யுமாறு அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர் இல்லையெனில் எதிர்வரும் 02.12.2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேதாரண்யம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு வேதாரண்யம் அதிமுக ஒன்றிய இலக்கிய அணியின் சார்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

