திருச்செந்தூரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கிராம நல வழிபாடு நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில் அருகே உள்ள வ.உ.சி தெரு சந்தன மாரியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து கிராம நல வழிபாடு நடைபெற்றது. சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்துகொண்டு 108 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, வளைகாப்பு விழா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் மன்ற பொறுப்பாளர் செல்வி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

