பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாவட்ட இளைஞரணி தலைவர் கணபதி மகளிரணி செல்வ கணி, தீபா, சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் மகாராஜன், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பாரதி ஜனதா கட்சி ஆளும் பல மாநிலங்களில் மாநில அரசின் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, சுரேஷ், மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், பட்டியல் அணித்தலைவர் வைரமுத்து, முருகதாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ், ஜோசியர் சங்கர சுப்பிரமணியன், மண்டலத் தலைவர் குரு டவுன் வீரமணி உள்பட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

