தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி – ஸ்ரீவை எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே ஏரலில் பெட்ரோல் – டீசல், விலைவாசி உயர்வு மற்றும் மக்கள் விரோத பாஜக அரசைக் கண்டித்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.
மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 22.11.2021 ஏரல் பேருந்து நிலையம் அருகில் மாலை 4.00 மணி அளவில் மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான டாக்டர் ஸ்ரீ வல்ல பிரஷாத், கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.
இந்த மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பேரணி ஏற்பாட்டை ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவருமான ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் செய்திருந்தார். ஏரல் நகரில் முக்கிய வீதி வழியாக வந்த இந்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி ஏரல் பேருந்து நிலையம் அருகே நிறைவுபெற்றது. இந்த மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள், பெண்கள் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக மகாத்மா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இந்த மாபெரும் பேரணியை முன்னிட்டு ஏரல் நகர் முழுவதும் இருபுறமும் காங்கிரஸ் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள், வியாபாரிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் மத்திய அரசை கண்டித்து எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்திக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். இப்பேரணியில் விலைவாசி உயர்வை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.





கூட்டத்தில் டேவிட் பிரபாகரன்(மாவட்ட வர்த்தக மாவட்ட தலைவர்), முத்துக்குட்டி,(தூத்துக்குடி முன்னாள் மாவட்ட தலைவர்), ஜெயக்கொடி,(மாநில ஒருங்கிணைப்பாளர் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்), சிந்தியா (மாநில செயலாளர்), ஆடிட்டர் சிவராஜ் மோகன் (மாவட்ட தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன்), கணேஷ் (ஓபிசி மாவட்ட தலைவர்), தங்கராஜ் (மண்டல தலைவர்), செந்தூர் பாண்டி (மண்டல தலைவர்), திலகேஸ் (மாவட்ட தலைவர், இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்), மிக்கேல் குரூஸ் (மீனவரணி), முத்துராஜன், மணிவேல், ஜான் வெஸ்லி, ராஜபாண்டி,ஏசுதாஸ், சேகர், சுந்தர் ராஜ், மற்றும் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

