• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது செய்த திருவல்லிக்கேணி காவல் குழுவினரை சென்னை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி

policeseithitv by policeseithitv
November 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது செய்த திருவல்லிக்கேணி காவல் குழுவினரை சென்னை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி வாலிபரை திருவல்லிக்கேணி அழைத்துச் சென்று ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது செய்து, 19 செல்போன்கள் மற்றும் ரூ.5,800/- கைப்பற்றிய திருவல்லிக்கேணி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பூடன் பகுடி, (வ/21), என்பவர் தாம்பரம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். பூடன் பகுடி 28.10.2021 அன்று தனது சொந்த ஊர் செல்ல இரயில் டிக்கெட் வாங்குவதற்கு சென்ட்ரல் இரயில் நிலையம் வந்த போது, அங்கு முன்பதிவு செய்யப்படாத இரயில் டிக்கெட் விற்பனை இல்லை என்று கூறியதால், அருகிலிருந்த கும்பல் மேற்படி பூடன் பகுடியிடம் தாங்கள் டிக்கெட் வாங்கி தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, சேப்பாக்கம், அக்பர் தெரு அருகே அழைத்துச் சென்று அவரிடமிருந்த பணம் ரூ.5,000/- மற்றும் 1 செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இது குறித்து பூடன் பகுடி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைச்செல்வி, முதல்நிலைக் காவலர்கள் மணிமுத்து, வேல்செல்வன் மற்றும் சலீம் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட1.அமன்குமார், (வ/23), பீகார் மாநிலம் 2.ரபிகுமார், (வ/22), பீகார் மாநிலம் 3.சாஞ்சி மஹ்தோர், (வ/36), பீகார் மாநிலம் 4.மோஹித்குமார், (வ/21), பீகார் மாநிலம் 5.ராஜேஷ்குமார், (வ/26), பீகார் மாநிலம் 6.சுஷில்குமார், (வ/22), பீகார் மாநிலம் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19 செல்போன்கள் மற்றும் ரூ.5,800 கைப்பற்றப்பட்டது.

விசாரணையில் மேற்படி எதிரிகள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்று பணம் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்றது தெரியவந்தது.

மேற்படி சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட திருவல்லிக்கேணி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

Previous Post

பெட்ரோல் டீசல் விலை மீதான வரியை குறைக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

Next Post

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனைப் பாராட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாழ்த்து மடல்.

Next Post
சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனைப் பாராட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாழ்த்து மடல்.

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனைப் பாராட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாழ்த்து மடல்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In