வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
நாட்டு மக்களிடையே நேற்று (நவ.19) காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக திடீரென அறிவித்தார். வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை என்றும் தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடிய வில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அந்தச் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்கள் தவறு என்ற அவர், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடியதன் விளைவாக, வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இன்றும் விவசாயிகள் கையில்தான் உள்ளது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயி களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று (20.11.2021) அஞ்சலி செலுத்தப்படும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தருவதற்காக, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். என்று கூறினார்.
அறிவிப்பின் பெயரில் இன்று பானு பிருந்தாவன் ஹோட்டலில் வைத்து வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட தலைவரும், திருவைகுண்டம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில் வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். காலதாமதமாக கிடைத்தாலும் அவர்களின் அறவழி போராட்டத்தில் பல இன்னுயிர்களை இழந்த பிற்பாடு இந்த சட்டத்தை ரத்து செய்து இருப்பது கொஞ்சம் மனவேதனை அளிக்கிறது. இருந்தாலும் விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதவேண்டும். மத்திய அரசு விவசாயிகளிடம் இந்த சட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த சட்டத்தை எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொள்ளாது. காங்கிரஸ் ஆட்சி பெருப்பேற்ற பிறகு விவசாயிகளின் மனநிலையை அறிந்து இந்த சட்டத்தை திரும்ப கொண்டு வராது என்று கூறினார்.
கூட்டத்தில் டேவிட் பிரபாகரன்(மாவட்ட வர்த்தக மாவட்ட தலைவர்), முத்துக்குட்டி,(தூத்துக்குடி முன்னாள் மாவட்ட தலைவர்), ஜெயக்கொடி,(மாநில ஒருங்கிணைப்பாளர் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்), சிந்தியா (மாநில செயலாளர்), ஆடிட்டர் சிவராஜ் மோகன் (மாவட்ட தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன்), கணேஷ் (ஓபிசி மாவட்ட தலைவர்), தங்கராஜ் (மண்டல தலைவர்), செந்தூர் பாண்டி (மண்டல தலைவர்), திலகேஸ் (மாவட்ட தலைவர், இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்), மிக்கேல் குரூஸ் (மீனவரணி), முத்துராஜன், மணிவேல், ஜான் வெஸ்லி, ராஜபாண்டி,ஏசுதாஸ், சேகர், சுந்தர் ராஜ், மற்றும் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


