தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் திறக்கப்படாத மர்மம் என்ன? பொதுமக்கள் கேள்வி!!.
தூத்துக்குடி மாநகரமே சமீபத்தில் பெய்த கனமழையினால் மழைநீர் தேங்கி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகள், பழைய கட்டிடங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் 12வது தெரு, மங்களபுரம் மைய எண் 37ல் அங்கன்வாடி கட்டிடம் வாடகை கட்டிடத்தில் இருந்து செயல்பட்ட காரணத்தினால், மாநகராட்சி புதிதாக சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்தது. அதன்படி, அதன் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டி முடித்தனர்.
இந்நிலையில், அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகிறது. இம்மையத்தை திறக்காமல் இன்னும் வாடகை கட்டிடத்திலேயே அங்கன்வாடி மையம் செயல்பட்டுகிறது.
அரசியல் காரணங்களால் அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்படாமல் இருப்பதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் அதனை பயன்படுத்தாமல், வாடகை கட்டிடத்திலேயே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நடத்தப்போகிறார்கள் என்று முணுமுணுக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு பல்வேறு துறைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்கி வருகிறது. அரசின் பார்வை, அங்கன்வாடி மைய கட்டிட விவகாரத்தில் ஒழிந்துள்ள அரசியல் காரணங்களை அப்புறப்படுத்தி குழந்தைகள் நலன் பேணுவாரா முதலமைச்சர் என சமூக ஆர்வலர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
செய்தி தொகுப்பு: நமது சிறப்பு நிருபர்

