இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாள் விழா: ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
_______
இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாள் விழா ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் காங்கிரஸார் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி இந்திராகாந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் காங்கிரசார் அவரது அலுவலகத்தில் வைத்து இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவரது அலுவலகத்தில் இந்திரா காந்தியின் திருவுருவ படத்திற்கு பூக்களால்
அலங்கரிக்கப்பட்டு,
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டேவிட் பிரபாகர், நகர காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்கொடி, சாத்தான்குளம் காங்கிரஸ் நிர்வாகி சங்கர், காங்கிரஸ் எடிஷன் , சந்திரபோஸ்,மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு இந்திரா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள் .

