நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
???? தென் கிழக்கு வங்க கடல், மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (DEPRESSION) இன்று 11.30 மணியளவில் மாறியுள்ளது.
இது சென்னைக்கு 310km தொலைவிலும், புதுச்சேரிக்கு 270km தொலைவிலும் உள்ளது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை (19.11.2021 )வட தமிழக-தெற்கு ஆந்திரா கரை கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் உள்ளூர் எச்சரிக்கை (Local Cautionary) குறியீடு எண் 3ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
நாகை துறைமுக அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

