தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து 152 வது பிறந்த நாள் விழா: சிலைக்கு எம்பி, அமைச்சர்,
எம்.எல்.ஏ, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!
—————
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மற்றும் அரசியில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி நகரின் தந்தை என்று போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துவின் 152 வது பிறந்தநாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிகிறது. இதையொட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் இன்று அன்னாரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ்
திரளான காங்கிரஸ் தொண்டர்களுடன்
குரூஸ் பர்னாந்து முழுவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருக்கு தூத்துக்குடி வர்த்தக காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் பிரபாகர் மற்றும் ஜெயக்கொடி ஆகியோர் தலைமையிலும்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் ஆகியோர் தலைமையில்
காங்கிரஸ் தொண்டர்கள் வெடி வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர் பின்னர் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அமமுக
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அமைப்புச் செயலாளர்கள் இரா.ஹென்றி தாமஸ், சுந்தர்ராஜ் ஆகியோர் தலைமையில்,
குரூஸ் பர்னாந்து திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் விபிஆர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அந்தோணி கிரேஸ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, மாவட்ட இளம்பெண்கள் பாசறை உமர்பீவி, எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ஆறுமுகசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேமுதிக
தேமுதிக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரன் அவர்கள் தலைமையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் குரூஸ் பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோல் பல்வேறு அமைப்புகள் இன்று காலையில் இருந்து மதியம் 12 மணி வரை தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

