மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாம்; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு 25-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 13.11.2021 தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாமானது தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள ஞானம் மஹாலில் வைத்து நடைபெற்றது. அதில் மாண்புமிகு தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி /தலைவர், திருமதி.S.சுமதி,M.L., மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தூத்துக்குடி அவர்கள் தலைமை தாங்கினார். மேற்படி விழிப்புணர்வு முகாமில் கிராம உதய தொண்டு நிறுவன இயக்குனர் /நிறுவனர் டாக்டர். திரு.V.சுந்தரேசன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.P.சிவ சங்கரன், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திரு.A.இளைய ராஜா, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் திரு.P.சூரியன், தூத்துக்குடி மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் திரு.காசிராஜன், தூத்துக்குடி மாவட்ட சமுக நலத்துறை பணியாளர், கிராம உதய தொண்டு நிறுவன பணியாளர்கள், 600 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். மேற்படி முகாமில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நலவாரியம் மூலம் 504 மக்களுக்கு தொழிலாளர் நலவாரிய அட்டை, தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள், 500 மரக்கன்றுகள் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையில் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 1007 பயனாளிகள் இந்த மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாம் மூலம் பயனடைந்துள்ளனர்கள். மாண்புமிகு மாவட்ட நீதிபதி தனது தலைமையுரையில இலவச சட்டத்திட்டத்தை பற்றியும், அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்றும், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கூறினார். மேற்படி மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணியாளர்கள் திரு.A.நம்பிராஜன், திரு.T.பால் செல்வம் மற்றும் கிராம உதய தொண்டு நிறுவன ஊழியர் திரு.செல்வம், திரு.ராமச்சந்திரன் ஆகியோர்கள் செய்திருந்தார்கள்.

