தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர், தொழிற்துறை விற்பனையாளர் சங்கத்தினர்,இந்து வணிகத்தினர் சங்க நிர்வாகிகள் தியாகராஜன், மாரியப்பன்,குணசீலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறினார்கள்.
தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீராக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை நமது நாட்டின் காப்பர் உற்பத்தியில் சிறந்து விளங்கி வந்தது. இந்த ஆலையை நம்பி ஆயிரகணக்கானவர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2018ல் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் எங்களை போன்றவர்கள் நிலையான வருமானம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்கிடையே ஆலை மீண்டும் துவக்கப்படுவது குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.
இதற்கிடையே கோவிட் 19 காரணமாக நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டு தொழிற்வளர்ச்சி முடங்கிபோய்உள்ளது. வேலையின்மை மிகக்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டால் மீண்டும் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு வசதியாக இருக்கும். பல்லாண்டுகளாக தூத்துக்குடியில் வசித்து வரும் நாங்களும் ஸ்டெர்லைட் ஆலையில் பணி புரிந்து வரும் எங்களை சார்ந்த தொழிலாளர்களும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறோம்.
எனவே இரு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மாற்றுவேலை ஏற்பாட்டிற்காகவாது திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இதன் மூலமாக நேரடியாக 5000 ஒப்பந்த பணியாளர்களும், மறைமுகமாக 20 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாயப்பு கிடைக்கும்.மேலும் இந்த தீர்ப்பிற்கு எதிராக ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும் என்றனர். பேட்டியில் சங்கங்கங்களின் நிர்வாககிகள் நெல்லை ஜிந்தா, பரமசிவம், லெனின் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.