நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் வெள்ளப்பள்ளம் கடற்கரையில், க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சிவசங்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.அருண் பிரசாத் அவர்கள் தலைமையில் ரகசிய முறையில் கண்காணிப்பு செய்த போது சந்தேகபடும்படியாக இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்த போது 1 ) பாலகுரு வ 37 சுப்பிரமணியன் மீனவர்காலனி, வெள்ளப்பள்ளம், 2) ஆனந் ( எ ) சத்தியானந்தம் வ43 த/பெ குப்புராஜ், மீனவர்காலனி, வெள்ளப்பள்ளம், என்றும் பாலகுரு கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 2.36 Kg அம்பர்கிரிஷ் வைத்திருந்தனர் இவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.


செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட. செய்தியாளர்.

