• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள், கடன் வழங்கும் முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்பு!!

policeseithitv by policeseithitv
November 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள், கடன் வழங்கும் முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.   அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா : நலத்திட்ட உதவிகள், கடன் வழங்கும் முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்பு!!

—————-

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழாவை முன்னிட்டு நலதிட்ட உதவிகள், கடன் வழங்கும் முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா தூத்துக்குடியில் உள்ள ஏவிஎம் கமலவேல் மஹாலில் நடைபெற்றது. முன்னதாக தலைமை அலுவலகத்தில் நிறுவனர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், வங்கியின் 100வது E-lobbyயை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார். இரத்ததான மற்றும் மருத்துவ முகாம் மூலமாக 60 unit இரத்தம் சேகரிக்கப்பட்டது. லக்ஷ்மி மஹாலில் வைத்து கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினார்கள்.

பொதுமேலாளர் சூரியராஜ் வரவேற்புரை வழங்கினார். துணை பொது மேலாளர் விஜயன் நன்றியுரை வழங்கினார். வங்கியில் உள்ள அணைத்து 12 மண்டலங்களிலும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி முகாமில் 200 பயனாளிகளுக்கு ₹103 கோடி கடன் உதவி தொகை வழங்கப்பட்டது. AVM கமலவேல் மஹாலில் வைத்து நூற்றாண்டு நிறுவனர் தின விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ராஜேஷ் வைத்யாவின் இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நிறுவனர் குடும்ப உறுப்பினர்கள் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

பொது மேலாளர் சூரியராஜ், வரவேற்புரை வழங்கியதை தொடர்ந்து துணைத் தலைவர் சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினரை பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர் கோபால் ஸ்ரீனிவாசன் அவர்களை கௌரவித்து சிறப்புரையாற்றினார். வங்கியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் வங்கியின் முன்னாள் இயக்குனர் சிஎஸ் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். வங்கியின் சமூகப் பொறுப்பு நிகழ்வுகள் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. 100 ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக வங்கியில் பல்வேறு 100 நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது.

முன்களப்பணியாளர்கள் 100 நபர்களுக்கு நாடுமுழுவதும் மரியாதையை செய்யப்பட்டது. இதில் 5 நபர்களுக்கு மட்டும் விழா மேடையில் கௌரவம் செய்யப்பட்டது. கோவிட் 100% தடுப்பூசி இலக்கை அடையும் விதமாக 161 கிராமங்களில் 100% மக்களுக்கு முழுவதுமாக தடுப்பூசி வழங்கப்பட்டது. மொத்தமாக 11,726 நபர்கள் பயனடைந்தனர்.100 தனி நபர் பயனாளிகளுக்கு இந்தியா முழுவதுமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்த விழாவிலேயே வழங்கப்பட்டது. 100வது கிளையாக சாத்தூர் கிளைக்கு ISO 9001: 2015 சான்றிதழ் இந்த நன்னாளில் பெறப்பட்டது.

முன்களப்பணியாளர்களான தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரொக்க உதவி 4 நபரைகளுக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் வங்கியின் மெய்நிகர் அருங்காட்சியகத்தை துவங்கி வைத்தார். பல்வேறு தரப்பட்ட போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இந்தியா முழுவதுமாக நடத்தப்பட்டது. இதன் மூலமாக ஒவ்வொரு போட்டியிலும் மூவர் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கான சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் கோபால் ஸ்ரீனிவாசன் சிறப்புரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து பொது மேலாளர் இன்பமணி நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி , இயக்குனர்கள் குழுவினர், துணைத் தலைவர், பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணை பொது மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் வங்கி நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

Previous Post

நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது

Next Post

வெள்ளப்பள்ளம் கடற்கரையில், சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 2.36 Kg அம்பர்கிரிஷ் வைத்திருந்த இருவர் கைது

Next Post
வெள்ளப்பள்ளம் கடற்கரையில், சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 2.36 Kg அம்பர்கிரிஷ் வைத்திருந்த இருவர் கைது

வெள்ளப்பள்ளம் கடற்கரையில், சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 2.36 Kg அம்பர்கிரிஷ் வைத்திருந்த இருவர் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In