இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா
நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இன்று இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி அவர்களின் பிறந்த நாள் விழா (நவம்பர் 12) தேசிய பசுமைப்படை சார்பில் கொண்டாடப்பட்டது.
பறவைகளுக்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர் “இந்திய பறவைகள் மனிதர்” சலிம் அலி.
கல்வியறிவில்லாத, பறவைகளைப் பற்றி அறிந்திராத அக்காலத்தில் பறவைகள் மேல் ஈடுபாடு கொண்டு பறவைகளை நுணுக்கமாக அவதானித்து ஆகச்சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.
பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பறவைகளின் ஓவியத்தை வரைந்தனர்.
மாணவர்கள் பின்பு பறவைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பறவைகளை துன்புறுத்த மாட் டோம்.
பறவைகளை வேட்டையாடுவதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வோம்.
பறவைகளுக்கு தீங்காக அமையும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை குறைப்போம்.
மேற்கண்ட கருத்துக்கள் மாணவர்களுடன் விவாதிக்கப்பட்டு உறுதிமொழியாக எடுக்கப்பட்டது.
நிகழ்வுகளை பள்ளியின் பசுமைப்படை ஆசிரியர் கி.பாலசண்முகம் ஒருங்கிணைத்தார்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.
.

