• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார்

policeseithitv by policeseithitv
November 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார்
வேதாரண்யம் நவ 11
நாகப்பட்டினம் மாவட்டம் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மற்றும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அதுல்யமிஸ்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நாகை மாவட்டஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் இருந்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
வடகிழக்குபருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் முகாம்கள் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டு மூழ்கியுள்ள பயிர் நிலங்களையும் பார்வையிட்டு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து தற்பொழுது குறைந்துள்ளது. மாவட்டநிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்ததால் மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகமில்லை.மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்களை பாதுகாப்பாக பள்ளிகள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்கவைத்தும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் மற்றும் மருத்துவ வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருசில இடங்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிரதமமந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் படி நமது மாவட்டத்தில் 56,000 ஹெக்டேர் பரப்பு சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 50,000 பேர் இதுவரை பிரதம மந்திரி காப்பீட்டு திட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்கள். அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகைக்கு பதிவு செய்ய கடைசி தேதி (15.11.2021) என்பதால் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டுநாட்கள் பெய்தமழையில் சுமார் 7,127 ஹெக்டெர்ஸ் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை குறைந்துள்ளதால் பயிர் நிலங்களில் உள்ளநீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்யப்படும்.
அதனைத்தொடர்ந்து கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கண்ணி, திருப்பூண்டிமேற்கு, காமேஸ்வரம் ஆகிய ஊராட்சிகளில் மழைநீரில் மூழ்கியுள்ள பயிர் நிலங்களையும், வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் உள்ள புயல் பாதுகாப்புமையம் மற்றும் அங்கு நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினையும், வானவன் மகாதேவி ஊராட்சியில் சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் எச்சரிக்கை கருவி மற்றும் அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் பழங்கள்ளிமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவினையும் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும்; தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அதுல்யமிஸ்ரா பார்வையிட்டுஆய்வுசெய்தார்.
மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தை வளர்ச்சி படுத்துவது குறித்தும், தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரையும் நேரில் பார்வையிட்டு, மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் தமிழ்நாடு மின்விசைநிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அதுல்யமிஸ்ரா தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடுகடல்சார் வாரியம் துணைத் தலைவர் மற்றும் முதன்மைசெயல் அலுவலர் முனைவர் பாஸ்கரன் முன்னிலையில் ஆலோசனை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்டஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) குணசேகரன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் தனபால், கீழையூர், தலைஞாயிறு வட்டாரவளர்ச்சிஅலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

மதுரை மாவட்டத்தில் காணமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு – மாவட்ட எஸ்பி உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்

Next Post

நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது

Next Post
நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது

நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In