வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தியில் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது இங்கு ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்தாயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகமெங்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஜனவரி மாதம் துவங்கி நவம்பர் வரை நடைபெறும் உப்பு உற்பத்தி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 4.5லட்சம் டன் முதல் 6 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு உப்பு உற்பத்தி மழையால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது பெய்த மழையால் உப்பளங்களுக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட உட்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பை வெளியில் எடுக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மழைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்குவது போல உப்பளத் தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென உப்பளத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

